மேகாலயாவில் முதல்வர் கான்ராட் கே சங்மாவின் சொந்த தொகுதியான தெற்கு துராவில் உள்ள பி ஏ சங்மா ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியை நடத்த மேகாலயாவின் விளையாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆளும் தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, மாநிலத்தில் ‘பாஜகவின் அலையைத் தடுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிப்ரவரி 24 ஆம் தேதி ஷில்லாங் மற்றும் துராவில் பிரதமர் பிரச்சாரத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மைதானத்தில் அதிக அளவில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது. எனவே, அலோட்க்ரே கிரிக்கெட் மைதானத்தில் மாற்று இடம் பரிசீலிக்கப்படுகிறது” என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்வப்னில் டெம்பே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 90 சதவீத நிதியில், 127 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மைதானத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரிதுராஜ் சின்ஹா கூறுகையில், ஒரு மைதானம் முழுமையடையாதது மற்றும் கிடைக்கவில்லை என்று எப்படி அறிவிக்க முடியும்? என் கேள்வி எழுப்பி உள்ளார்.