fbpx

பெருவெள்ளம் ஓய்ந்ததும் உருவெடுத்த ’மீலியாய்டோசிஸ்’ பாக்டீரியா..!! உயிரை பறிக்கும் அபாயம்..!! சென்னை மக்களே உஷார்..!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது தண்ணீர் வடிந்து இருக்கும் நிலையில், மீலியாய்டோசிஸ் என்ற பாக்டீரியா நோய் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. அது என்ன நோய்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இந்நிலையில், வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில் புதிய பிரச்சனை ஒன்றை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். மழைக் காலங்களில் மண்ணிலிருந்து பரவும் ‘மீலியாய்டோசிஸ்’ என்ற அரிய வகை பாக்டீரியா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், போதிய விழிப்புணர்வு இன்றி சிகிச்சை எடுக்காமல் இருந்தால் இந்த தொற்று முக்கிய உறுப்புகளை செயலிழக்க செய்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரு வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்பட்ட பிறகு ‘மீலியாய்டோசிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று பரவ தொடங்குகிறது. விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு ஒரு சேர பரவும் இந்த தொற்று பாக்டீரியா வகையை சேர்ந்ததாகும். மண்ணுக்குள் உள்ள பல வகையான பாக்டீரியாக்களில் முக்கியமானதாக இருக்கும் ‘பார்கோல்டெரியா ஸ்யூடோமேய்’ எனப்படும் நுண்ணுயிரி மூலமாக இந்த ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பரவுகிறது.

கால்கள், உடலில் காயமடைந்தவர்கள் மாசடைந்த நீரில் நடக்கும்போதும், தூய்மையற்ற குடிநீரை அருந்தும்போதும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அந்த பாக்டீரியாக்கள் பரவியுள்ள காற்றை சுவாசிக்கும்போதும் நோய் பாதிப்பு ஏற்படலாம். உடலில் பாக்டீரியா கிருமி ஊடுருவிய இரண்டு வாரங்களில் அறிகுறிகள் தென்பட தொடங்குகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அண்மையில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்பே தற்போது அங்கு ‘மீலியாய்டோசிஸ்’ நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

‘மீலியாய்டோசிஸ்’ தொற்றுக்கான சிகிச்சையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சிகிச்சையை தாமதிக்காமல் உடனே தொடங்குவது அவசியம். மேலும், மழைக்காலங்களில் தேங்கிய நீரில் காயங்கள் உள்ள உடல் பாகங்கள் படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாசடைந்த நீரை அருந்தக் கூடாது. குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காலணி அணியாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

அறிகுறிகள் : காய்ச்சல் – உடல் சோர்வு – தலைவலி – மூட்டு வலி – வயிற்றுப்போக்கு – வாந்தி – மூச்சுத் திணறல் – இறுதியில் சிறுநீரக செயலிழப்பு

Chella

Next Post

மிக மோசமான நிலைமை..!! ஒரு லட்சம் கன அடி நீர்..!! 100% வெள்ளம்..!! அதிகாரிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் பரபரப்பு உத்தரவு..!!

Mon Dec 18 , 2023
தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு அடி முதல் அதிகபட்சம் 8 அடி வரை மழை நீரானது தேங்கி இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, செல்வ விநாயகர் புரம், தனசேகரன் […]

You May Like