கர்நாடகா – தமிழ்நாடு எல்லையில் அத்திபெலே என்ற இடம் உள்ளது. அந்தப் பகுதியில் 30 வயதான ஹாரீஷ் மற்றும் ஹேமந்த் என்ற நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேரும் காதலித்து வரும் நிலையில், இருவரும் தங்கள் காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் தங்கள் காதலிகளை மாற்றி உடலுறவு வைப்பது குறித்து அவர்களின் காதலிகளிடம் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதலிகள், இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஹாரீஸின் காதலி இது குறித்து பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‛‛கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நானும் ஹாரீசும், உடலுறவு வைத்து கொண்டோம். அதை அவர் எனக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டுள்ளார். இப்போது அதனை காட்டி மிரட்டி, அவரது நண்பருடன் உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துகிறார். இதற்கு கைமாறாக ஹேமந்த் அவரது காதலியை ஹாரீசுடன் உடலுறவு வைக்க அனுமதிக்க உள்ளதாக கூறுகிறார்” என்றார்.
இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஹாரீஸ் மற்றும் ஹேமந்த்தை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஹாரீஸ் மற்றும் ஹேமந்த், காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், இதற்க்கு முன்பு இது போன்று பல பெண்களை மாறிமாறி உல்லாசம் அனுபவித்தது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில், இருவரும் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த வீடியோ இருந்துள்ளது. இதையடுத்து, போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: முதலிரவில், மணமகள் கேட்ட காரியம்; அலறியடித்து ஓடி, விவாகரத்து கேட்ட மணமகன்..