விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமம் ஒன்றை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தென்காசியில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், திடீரென சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், விசாரணையில், காரியாபட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 4 போ் வெவ்வேறு சமயங்களில், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 53 வயது முருகன், 44 வயதான முன்னாள் ஊராட்சிச் செயலா் பாண்டியராஜ், 46 வயதான ஜவகா், 80 வயதான தேவராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகா், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், பாண்டியராஜ், ஜவகா், தேவராஜ் ஆகிய 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
Read more: செம குட் நியூஸ்..!! செல்போன், டிவிக்களின் விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!