fbpx

65 வயதில், உடலுறவுக்கு ஆசைப்பட்டு முதியவர் செய்த காரியம்..

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்துக் கொள்ளாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் ஆகாத பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேப்பூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான மாரிமுத்து என்பவர் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, மாடு மேய்க்கும் போது மாரிமுத்து அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில், இளம்பென்னிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். மேலும், 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது தான் அக்கம்பக்கத்தினருக்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் மாரிமுத்துவை அதிரடியாக கைது செய்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மேலும், இந்த வயதில் இவருக்கு இது தேவையா என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

Read more: தீராத முழங்கால் வலியால் அவதி படுறீங்களா? அப்போ தினமும் இதை மட்டும் செஞ்சா போதும்.. இனி எந்த மருந்தும் தேவைப்படாது..

English Summary

mentally-disturbed-woman-was-sexually-abused

Next Post

தினமும் பாக்கெட் பால் குடிக்கிறீங்களா? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..

Fri Dec 6 , 2024
hazards-in-drinking-pocket-milk

You May Like