fbpx

மக்களே…! அடுத்த 4 நாட்களில் பனியின் தாக்கம் குறைந்துவிடும்..! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் பனியின் தாக்கம் குறைந்துவிடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நாளை முதல் வரும் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது ‌.

Vignesh

Next Post

உஷார்...! உங்க ATM card தொலைஞ்சு போச்சா...? ஆன்லைன் மூலம் உடனே இதை பிளாக் செய்ய வேண்டும்...!

Sun Feb 12 , 2023
வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து புதிய கார்டு பெறலாம். எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வதற்கு 1800112211 மற்றும் 18004253800 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணை அழைக்கலாம். அதேபோல் புதிய கார்டை பெறுவதற்கும் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் இணையதளம் வாயிலாக சென்று உங்களுடைய ஏடிஎம் […]

You May Like