மெட்ரோ ரயில் பயணிகள் கியூஆர் கேடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இனி வரும் காலங்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெரும் சேவையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
கியூ ஆர் கோடு மூலம் எடுத்தால் உங்களுக்கு 20% டிக்கெட் கட்டண தள்ளுபடி உள்ளது. உதாரணத்திற்கு கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் செல்ல 50 ரூபாய் இருக்கும் கட்டணத்தில் கியூ ஆர் கோடு மூலம் 42 ரூபாய்க்கு டிக்கெட் பெறமுடியும். கியூஆர் கோடு மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றியும், வாகன நிறுத்துமிடம் உள்ள பல்வேறு இடங்களில் இடம்பெறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் 5 கிளிக்கில் டிக்கெட் பெற முடியும். இருக்கும் பயணிகளைத் தக்க வைக்கவும், புதிய பயணிகளை வர வைக்கவும் இந்த ஏற்பாடு. இது ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் இடம்பெறும். இது முழுக்க முழுக்க 100% பாதுகாப்பான வழிமுறையாகும்.