நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் போக்குவரத்திற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் தொகை அதிகமாக கொண்ட நகரங்களிலும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே போக்குவரத்து இடைஞ்சல்களை சரி செய்யும் விதத்தில், மெட்ரோ ரயில் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதோடு, சாதாரண போக்குவரத்தை விடவும் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, மிகவும் குறைந்த அளவிலான நேரம் மட்டுமே செலவாகிறது. சென்னையில், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிக தீவிரமான நிலையில் நடைபெற்று வருகின்ற நிலையில், எம்.ஆர்.எல் நிர்வாகம் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆகவே தற்சமயம் பயன்பாட்டில் இருக்கின்ற மெட்ரோ பயன்பாட்டு அட்டையை முழுமையாக நிறுத்திவிட்டு, தேசிய பொது இயக்க அட்டை மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த அட்டை பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த பயண அட்டைகளை கொண்டு சென்னை மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு நகரங்களிலும், மெட்ரோ ரயில்களில், பயணம் செய்ய இயலும். அத்துடன், சென்னை எம்.பி.சி பேருந்துகளிலும் இந்த அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிகிறது.
மெட்ரோ அட்டையை போல, இந்த அட்டையை நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய வங்கி கணக்குடன் இந்த தேசிய இயக்க அட்டை இணைக்கப்படும். ஆகவே நம்முடைய வங்கி கணக்கில் இருந்து, தேவையான கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த வசதி அமலுக்கு வந்தால் மெட்ரோ ரயில் பயணிகள் வெகு நேரம் வரிசையில் நின்று பயணசீட்டு எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆகவே பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.