fbpx

மக்களே…! இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது.

வரும் 8-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடடே என்ன ஒரு பக்தி மனம்! கோவிலில் திருட வந்த திருடன் "மனம் மாறிய அதிசயம்"..!

Mon Dec 5 , 2022
நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. காவல் நிலையங்கள் இருந்தாலும் திருட்டு சம்பவங்களை நிறுத்த முடிவதில்லை. அந்த விதத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு ஆலயத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனாலும் இந்த சம்பவம் ஒரு சுவாரசியமான நகர்வை கொண்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் என்ற கிராமத்தில் இருக்கின்ற ஜெயின் ஆலயத்தில் ஒரு திருடன் திருடுவதற்காக […]

You May Like