fbpx

பெற்றோர்களே கவனம்… இன்று இந்த 6 மாவட்டத்தில் மட்டும் கனமழை…! வானிலை மையம் முக்கிய தகவல்

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை அழைக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை, நாளை மறுநாள் கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

"சூப்பர் நியூஸ்" தமிழகம் முழுவதும் 729 பள்ளிகளுக்கு மட்டும் ஓராண்டு...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Fri Aug 12 , 2022
கட்டடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 729 பள்ளிகளுக்கு மேலும் ஓராண்டு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அனுமதியை வாகனங்களை இயக்குவதற்கு பெற வேண்டும் எனவும், பள்ளிக்கட்டங்களுக்கான வரைபட அனுமதி உரிய அலுவலரிடம் முறையாகப் பெற்றப்பின்னரே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என அரசு ஆணையிட்டது. […]

You May Like