fbpx

இந்த 5 மாவட்டத்தில் உள்ள மக்களே… எல்லாம் உஷாரா இருங்க…! இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை…! வானிலை மையம் தகவல்

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையுடன் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

யாரும் மறக்காதீங்க... விவசாயத்திற்கு ரூ.10,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்....! யாரெல்லாம் இதற்கு தகுதி...? விவரம் இதோ

Wed Aug 17 , 2022
மானியத்தில்‌ மின்மோட்டார்‌ பம்ப்‌ செட்டுகள்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலமாக, விவசாயிகளின்‌ உற்பத்தியை பெருக்கவும்‌, வருமானத்தினை அதிகரிக்கும்‌ பொருட்டு, பல்வேறு திட்டங்கள்‌ விவசாயிகளுக்கு மானியத்தில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில்‌ அறுவடைக்குப்‌ பின்‌ தொழில்நுட்பத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தாழ்த்தப்பட்ட விவசாயிகள்‌ மதிப்புக்‌ கூட்டும்‌ இயந்திரங்களான, மாவரைக்கும்‌ இயந்திரங்கள்‌, எண்ணெய்‌ பிழிந்தெடுக்கும்‌ செக்கு, கேழ்வரகு சுத்தப்படுத்தி […]

You May Like