fbpx

#Rain: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை…!

தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் 13-ம் தேதி வரை ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 14-ம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு குட்நியூஸ்... 73 லட்சம் பயனாளிகளுக்கு விரைவில் ஓய்வூதியம்...

Mon Jul 11 , 2022
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இந்நிலையில் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, மத்திய ஓய்வூதிய விநியோக முறையை அமைப்பதற்கான திட்டத்தை பரிசீலித்து வருவதாக கூறபடுகிறது.. இதன் மூலம் இந்தியா முழுவதும் […]

You May Like