fbpx

“கருணாநிதி வாழ்க்கையில் ஒளியேற்றியவர் எம்.ஜி.ஆர்..”- ஆ.ராசா விமர்சனம்.! “வாழ வைப்பது தான்..!” -எடப்பாடி பழனிச்சாமி. பதிலடி.!

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை போர்களும் விமர்சனங்களும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி திமுகவின் எம்பி ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய கருத்து மிகப்பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கியுள்ளது.

இதற்கு அதிமுகவின் பல்வேறு தலைவர்களும் நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையான எதிர்ப்பை முன் வைத்திருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் அவர் “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது புகழ் எங்கும் நிலைத்திருக்கிறது அதிமுகவின் வளர்ச்சி பிடிக்காமல் எதிரிகள் இவ்வாறான தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து வருவதாக” தெரிவித்துள்ளார்

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி ” புரட்சித்தலைவரால் வாழ்ந்தவர்களே அதிகம். அவர் எல்லோரையும் வாழ வைத்து பார்த்தவர் என தெரிவித்திருக்கிறார். திமுகவின் தலைவரே எம்ஜிஆரால் வாழ்ந்தவர் தான் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது போன்ற வரலாற்று உண்மைகள் தெரியாமல் ஆ.ராசா பித்தம் பிடித்தவர் போல் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வரலாற்று சம்பவம் ஒன்றையும் நினைவு கூர்ந்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியின் கடனை அடைத்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். முரசொலி மாறனின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடனை அடைக்க உதவியவர் எம்ஜிஆர் என தெரிவித்துள்ளார். கருணாநிதியின் வாழ்க்கையிலேயே ஒளியேற்றிய வரை ஆ.ராசா தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

Next Post

"ஊழலுக்கு டியூசன் எடுக்கலாம்.. நாடகம் நடத்தும் திமுக அரசு" - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.!

Fri Feb 9 , 2024
இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒருபுறம் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு வேலைகளில் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அரசியல் சார்ந்த மோதல்கள் தொடர்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நிதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருப்பதோடு டெல்லியில் ஆர்ப்பாட்டமும் நடத்தியது . இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பான […]

You May Like