மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5% பணியாளர்களை – 2023 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள் குறைக்கும் என்று அறிவித்தது. இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பொருளாதார மாற்றங்கள் நிலைக்கு மத்தியில் தொழில்நுட்பத்தில் உலகம் கண்டுவரும் மாற்றங்களை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்ட அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.