தன்னை காதலித்து ஏமாற்றி விட்ட ராணுவ வீரருடன் இளம்பெண் பேசும் ஆடியோ தற்போது ஆரணி பகுதியில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கிருஷ்ணபுரம் என்ற பகுதியைச் சார்ந்தவர் மதன்குமார் வயது 25. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியில் இருக்கிறார். இவர் ஆரணி அருகே உள்ள ஏந்துவாம் என்ற கிராமத்தைச் சார்ந்த ஷகிலா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இவர் மதன்குமாருக்கு அத்தை மகள் ஆவார். பட்டதாரியான இந்த பெண் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ராணுவத்திலிருந்து விடுமுறையில் வரும் போதெல்லாம் மதன்குமார் சகிலாவை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் விடுமுறையில் வந்த மதன் குமார் சகிலாவிடம் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி உல்லாசமாக இருந்திருக்கிறார்.
இதில் ஷகிலா கர்ப்பமாகிவிடவே ஆறு மாதங்கள் தனது பெற்றோருக்கு தெரியாமல் வைத்திருக்கிறார். பின்னர் அவரது பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக மதன் குமாரின் பெற்றோரிடம் புகார் கூறியபோது அவர்கள் தங்களுக்கு தெரியாது என மறுத்து விட்டனர். இந்நிலையில் அந்த குழந்தை பிறந்து எடை குறைவு காரணமாக இறந்து விட்டது தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்து விட்டதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார் ஷகிலா. இது தொடர்பாக காவல்துறை மதன்குமார் பணியாற்றும் ராணுவ மையத்திற்கு சம்மனை அனுப்பி வைத்திருக்கிறது. மேலும் மதன்குமாரின் தந்தை மீதும் புகார் செய்யப்பட்டிருப்பதால் அவரும் தலைமறைவாக இருக்கிறார் அவரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்நிலையில் ஷகிலாவும் மதன்குமார் பேசும் ஆடியோ ஒன்று தற்போது லீக் ஆகி வைரலாகியுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் சகிலா நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததால் தான் உன்னுடன் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்து பேசியிருக்கும் மதன் ‘உன்னை போல ஐந்து பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன் அதற்காக அவர்களை எல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியுமா?? என தெனாவட்டாக கேள்வி கேட்கிறார். மேலும் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ளயிருப்பதாகவும் அந்த ஆடியோவில் உறுதியாகக் கூறுகிறார் மதன்குமார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.