அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 ஆக உயர்த்தியுள்ளன..
கடந்த பிப்ரவரி மாதம் அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியது. இதற்குப் பிறகு, அமுல் கோல்டு பால், அரை லிட்டர் ரூ.30 ஆகவும், அமுல் டாசா பால் அரை லிட்டர் ரூ.24 ஆகவும், அரை லிட்டர் ரூ.27 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் அமுல் நிறுவனம் மீண்டும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது.. இந்த வருடத்தில் நிறுவனங்களின் இரண்டாவது உயர்வு இதுவாகும். புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும். அதன் படி அமுல் கோல்ட் பாலின் விலை அரை லிட்டர் ரூ.31 ஆகவும், அமுல் தாசா அரை லிட்டர் ரூ.25 ஆகவும், அமுல் சக்தி அரை லிட்டர் ரூ.28 ஆகவும் விற்கப்படும்.
பால் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுக்கான ஒட்டுமொத்த செலவு அதிகரிப்பதால் விலையை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டை விட கால்நடை தீவன செலவு மட்டும் சுமார் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும், உள்ளீடு செலவுகள் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதே போல் கடந்த மார்ச் மாதத்தில், மதர் டெய்ரி, டெல்லி-என்சிஆர் (தேசிய தலைநகர் மண்டலம்) பகுதியில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. மதர் டெய்ரி, டெல்லி-என்சிஆர் சந்தையில் பால் சப்ளையர்களில் முன்னணியில் உள்ளது.. சராசரியாக ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர்களுக்கு மேல் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் மதர் டெய்ரி நிறுவனமும் இன்று முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.. புதிய விலை அனைத்து பால் வகைகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, ஃபுல் கிரீம் பால் லிட்டருக்கு ரூ.61 ஆகவும், லிட்டருக்கு ரூ.59 ஆகவும் விற்கப்படும்..