fbpx

கோடையில் குளுகுளு.. வெறும் 500 ரூபாயில் மினி ஏசி.. கரண்ட் பில் கவலையில்லை.. இதோ விவரம்..!

வெறும் 500 ரூபாயில் மினி ஏசி வாங்க முடியும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?.. ஆம், ஆன்லைனில் குறைந்த விலையில் இந்த மினி ஏர் கூலரை வாங்கலாம்.

கோடை வெயில் இப்போதே தொடங்கிவிட்டது. அனைவருமே இன்னும் சில நாட்களில் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட Bவீட்டில் ஃபேன், ஏர் கூலர், ஏசி இல்லாமல் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். நாள் முழுவதும் ஏர் கூலர் அல்லது ஏசியை போட்டு வைத்திருந்தாலும் அது பிரச்சினைதான். ஏனெனில் கரண்ட் பில் எகிறிவிடும்.

சிலருக்கு ஏசிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முடியாமல் இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த மினி ஏசி ஃபேன்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்கள் அறிமுகம் செய்துள்ளன. Mini Cooler AC USB and Battery Operated Air Mini Water Air Cooler Cooling Fan இந்த வகை மினி கூலிங் ஃபேன்கள், ரூ. 449 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

சில நிறுவனங்கள் இதனை ரூ. 450 ரூபாய்க்கும், சில நிறுவனங்கள் இதனை ரூ. 500 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றன. இதன் மூலம் நீங்கள் மின்சார செலவை சேமிக்கலாம். இந்த வகை மினி ஃபேன்களை யூஎஸ்பி பேட்டரி கொண்டு நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம். போர்ட்டபிள் டிசைன் என்பதால், நீங்கள் உங்களுக்கு பிடித்த அறைகளில் இதனை வைத்துக் கொள்ளலாம். இது போன்ற பல மாடல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளன. அவை சின்ன டேபிள்களில் வைப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

ஹைட்ரோ-சில் டெக்னாலஜி மற்றும் டூயல் கூலிங் ஜெட் மூலம் கூலிங் கன்ட்ரோலைக் கொண்டுள்ளது. இது உங்களைச் சுற்றியுள்ள காற்றை குளிர்விக்கவும், ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. இதன் டாப்-ஃபில் டேங்கில் தண்ணீரை ஊற்றினால் ஏசி போன்ற காற்றை அனுபவிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்து வைக்கும் பட்சத்தில், 10 மணி நேரம் வரை குளிர்ந்த காற்றைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. அதிகப் பணத்தை செலவு செய்து ஏர் கண்டிஷனர்களை வாங்குவதை விட, இது போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். மேலும் மின்சாரக் கட்டணத்தை சேமிக்க உதவுகிறது.

Next Post

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Sun Apr 28 , 2024
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே சரியாவாணி என்ற கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகையிலிருந்து இலங்கைக்கு செரியபாணி என்ற கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். […]

You May Like