fbpx

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.5,650 ஆக உயர்வு…!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2025-26 பருவத்திற்கு கச்சா சணலுக்கான (டிடி-3 தரம்) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,650/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சராசரி உற்பத்திச் செலவை விட 66.8 சதவீத வருவாயை உறுதி செய்யும். 2018-19 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அரசு அறிவித்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை, சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு என்ற அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் கொள்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

2025-26 சந்தைப் பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முந்தைய சந்தைப் பருவமான 2024-25 ஐ விட குவிண்டாலுக்கு ரூ.315/- அதிகமாகும். 2014-15-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2400/- ல் இருந்த கச்சா சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலையை 2025-26-ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ. 5,650/- ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2014-15 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் சணல் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1300 கோடியாகவும், 2004-05 முதல் 2013-14 வரை ரூ.441 கோடியாகவும் இருந்தது.

40 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சணல் தொழிலைச் சார்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் சணல் ஆலைகளிலும், சணல் வர்த்தகத்திலும் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கடந்த ஆண்டு 1 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து சணல் கொள்முதல் செய்யப்பட்டது. 82% சணல் விவசாயிகள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இந்திய சணல் கழகம் (JCI) விலை ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மத்திய அரசின் அமைப்பாக உள்ளது.

English Summary

Minimum support price for jute increased to Rs. 5,650.

Vignesh

Next Post

பெரும் சோகம்...! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... 6 நாட்கள் கழித்து மேலும் ஒரு நபர் உயிரிழப்பு...!

Thu Jan 23 , 2025
Alanganallur Jallikattu... 6 days later, one more person dies

You May Like