அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது.
இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.