fbpx

எரும மாடா நீ..? பேப்பர் எங்க..? உதவியாளரை மேடையில் தரக்குறைவாக திட்டிய அமைச்சர் MRK பன்னீர் செல்வம்..!!

தஞ்சையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உதவியாளரை தரக்குறைவாக திட்டிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சையில் வேளான்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்ற தயாராக இருந்தார். உரையை தொடங்கி, ”அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் கூறிய அமைச்சர், திடீரென பின்னே திரும்பி ”எங்கே பரசுராமன்…” என கூற, உடனே மேடைக்கு வந்த உதவியாளரை எருமை மாடாடா நீ… பேப்பர் எங்க…” எனக் கடிந்து பேசினார்.

பொதுநிகழ்ச்சியில் உதவியாளரை தரக்குறைவாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read more ; வரும் 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாணவர்கள் செம குஷி..!!

English Summary

Minister MRK Panneerselvam’s disparaging of an assistant at a public event has caused controversy.

Next Post

சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்..!! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி..!!

Fri Jan 3 , 2025
The incident of a 19-year-old woman being forced to fall in love, doused with petrol and threatened to kill her has caused a stir.

You May Like