fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் மேல் சிக்கல்… ED வழக்கு விசாரணை ஒத்தி வைக்க மறுத்த நீதிபதி…!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்துள்ளார். அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாட்களும் அவர் கையெழுத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

அதன்படி, ஜாமீனில் கடந்த மாதம் 26-ம் தேதி வெளியே வந்த செந்தில் பாலாஜி, வெள்ளி மற்றும் திங்கட்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகின்றார். 29-ம் தேதி அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு எதிராக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி கடந்த வாரம் ஆஜரானார். அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், உடல்நிலை காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு வாரன்ட் பிறப்பித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அமலாக்க துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார்.

அப்போது செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்காமல் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியுமா..? என்று உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற உள்ளதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணை தொடரும் என்றார். இதையடுத்து, தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கவுதமன் குறுக்கு விசாரணை செய்தார். தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நிறைவு பெறாத காரணத்தால் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

English Summary

Minister Senthil Balaji adjourned the case pursued by the Enforcement Department: the hearing was adjourned to 29th

Vignesh

Next Post

பறவை காய்ச்சல் அச்சுறுத்தல்!. வியட்நாம் பூங்காவில் 47 புலிகள், 3 சிங்கங்கள் பலி!.

Sat Oct 5 , 2024
Dozens of zoo tigers die after contracting bird flu in Vietnam

You May Like