தமிழக மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற அவருடைய அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்பு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு நடுவில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில்தான் செந்தில் பாலாஜியிடமிருந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை உள்ளிட்ட 2️ துறைகளும் மாற்று அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதாவது செந்தில் பாலாஜியிடமிருந்த மின்சார துறை மாநில மனித பல மேம்பாட்டு துறை அமைச்சரான தங்கம் தென்னரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோன்று அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழக அரசு ஆளுநருக்கு வழங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.