fbpx

அமைச்சர் தகவல்!… தமிழகம் முழுவதும் இன்று!… 100 இடங்களில் முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்று 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற உள்ளது. புதியதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக நடக்கிறது.

சென்னையில் ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்ட 5 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. மழை அதிகம் உள்ளதால் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று 2000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Kokila

Next Post

இன்று 2,000 இடங்களில்..!! மருத்துவ முகாம், முதல்வர் காப்பீடு திட்ட முகாம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Dec 2 , 2023
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பலர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைகாலங்களில் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அரசு தரப்பில், அனைத்து மாவட்டங்களிலும், தூய்மை பணியாளர்கள் கொசுவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, ஒவ்வொரு வீடுகளிலும் கொசு உருவாகாத வண்ணம் நடவடிக்கைக எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று […]

You May Like