சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 04 அக்டோபர் 2022 அன்று ஜி.எஸ்.ஆர் 762 (ஈ) வரைவு அறிவிப்பின் மூலம் பாரத் (BH) தொடர் பதிவு குறியீட்டை நிர்வகிக்கும் விதிகளை மேலும் திருத்துவதற்காக பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்றது.
இதில் தற்போது தகுதியான நபர்களின் வழக்கமான பதிவு முத்திரையைக் கொண்ட வாகனங்களையும் பி.எச் சீரிஸ் பதிவு குறியீடாக மாற்றலாம். மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்க மாநில அரசுகள் மற்றும் சில தனி நபர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. பரிந்துரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அமைச்சகத்தில் பரிசீலிக்கப்பட்டன.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே ஜி.எஸ்.ஆர் 879 (இ) இறுதி அறிவிப்பை 14 டிசம்பர் 2022 அன்று வெளியிட்டுள்ளது பாரத் (பி.எச்) தொடர் பதிவு குறியீட்டை நிர்வகிக்கும் விதிகளில் திருத்தங்களை அறிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.