வேலூா் மாவட்ட பகுதியில் உள்ள உள்ள பாண்டமங்கலத்தின் திரெளபதியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ஸ்ரீதா் (35) என்பவர் புகளூா் காகித ஆலையில் தொழிலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தேவிப்பிரியா (32) என்பவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதிகளுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை. திங்கட்கிழமை அன்று இரவு மாத்திரை சாப்பிடவில்லை என்று கூறி மனைவி தேவிப்பிரியாவை கணவா் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் நிலையில் கோபித்துக்கொண்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. அதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பாண்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக வேலூா் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் கிணற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தது யார் என்னவென்று விசாரணை நடத்தினா். முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் காணாமல் போன தேவிப்பிரியா என்பது தெரியவந்துள்ளது.
இது பற்றி வேலூா் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அத்துடன் தேவிப்பிரியாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் திருச்செங்கோடு கோட்டாட்சியரான கௌசல்யா என்பவரின் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.