பொதுவாக நாம் வீட்டில் சமைத்து சாப்பிடும் பல பொருட்களிலும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. தினமும் வீட்டில் சமைத்து சாப்பிடும் போது ஊட்டசத்து நம் உடலுக்கு முழுமையாக கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அந்த வகையில் நாம் தினமும் வீட்டில் குடிக்கும் பாலில், நெய் கலந்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன என்பதை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்?
பால் மற்றும் நெய் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி நாம் நன்கு அறிவோம். எனினும், இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடுவதால் இவற்றின் பலன்கள் இரட்டிப்பாகிறது. பாலில் இரும்பு சத்து, புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை தவிர வைட்டமின்கள் A, D, B-6, E, மற்றும் K ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
நெய் என்பது பாலில் இருந்து தனியாக பிரித்து எடுக்கப்பட்ட ஒரு உணவு பொருள் தான் என்றாலும் இதை பாலிலேயே கலந்து தினம் குடிப்பதன் மூலம் உடலில் பல நோய்கள் குணமாகின்றது. குறிப்பாக வயிற்றுப் போக்கு பிரச்சனை இருப்பவர்கள் பாலில் நெய் கலந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து வயிற்றுப்போக்கும் விரைவில் சரியாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் பாலில் நெய் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது. கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் சத்து குறைபாட்டிற்கு பாலில் நெய் கலந்து குடித்து வந்தால் சரியாகும். இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் மற்றும் கொழுப்பு சத்து கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலி, கால் வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
பாலில் நெய் கலந்து பகல் நேரத்தில் குடிப்பது சிறந்த பலனை தரும். உடல் இயங்கி கொண்டிருக்கும் போது குடிப்பதால் முழு ஊட்டசத்தும் கிடைக்கும். ஆனால் இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பு பாலில் நெய் கலந்து குடிப்பது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இவ்வாறு பாலில் நெய் கலந்து குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
Read more ; கணவன் கண் முன், கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்..