fbpx

மோக்கா புயல்..!! 9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை..!! இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல் ஈர்த்தப்படி வடக்கு நோக்கி செல்வதால், இனி தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2ஆம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், நாகை, காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியால் மீனவர்கள் யாரும் இன்றும் 2ஆம் நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

Chella

Next Post

தமிழகத்தில் அதிகரிக்கும் சிம்கார்டு குற்றங்கள்…..! வெளியான அதிர்ச்சி தகவல்…..!

Thu May 11 , 2023
சமீபத்தில் இருந்து தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. சைபர் குற்றங்களில் வங்கிகளில் இருந்து பேசுவதைப் போல டெபிட் கார்டு எண்களை பெற்று வங்கி கணக்கு பணம் திருடும் மோசடிகள் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்னும் சற்று நூதனமான முறையில் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்றோ, அல்லது மின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றோ குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் உள்ள இணையதள லிங்கை கிளிக் செய்தால் பணம் […]

You May Like