fbpx

ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…! ‌

ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...! முழு விவரம் உள்ளே...!

Wed Jan 25 , 2023
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல்‌ 11.00 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட […]

You May Like