fbpx

“அவங்க தான் ராமர் லட்சுமணன்..” மோடி யோகி குறித்து நடிகர் சுமன் கருத்து.!

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு பிரான் பிரதிஷ்டையுடன் கோலாகலமாக நிலையுற்றது. இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று நடத்திய பிரதமர் மோடி 500 வருடங்களுக்குப் பிறகு தனது தாயின் வீடு திரும்பிய ஸ்ரீராமர் நம் அனைவரையும் மன்னிப்பார் என தெரிவித்திருக்கிறார். இந்திய மக்களின் நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உத்திர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி நகரில் கோலாகலமாக நடைபெற்றது .

இந்த விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாநில முதல்வர்கள் மத்திய அமைச்சர்கள் சினிமாத்துறை பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என ஏராளமான சிறப்பு அழைப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி சிறப்பு மந்திரங்கள் கூறி ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையை பிரதிஷ்டை செய்ய யோகி ஆதித்யநாத் மற்றும் மோகன் பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சுமன் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார். இவர் சிவாஜி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

கும்பாபிஷேக விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுமன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை பார்க்கும்போது ஸ்ரீ ராமர் மற்றும் அவரது சகோதரர் லட்சுமணன் போல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 500 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீராமரை அவரது இல்லத்திற்கு அழைத்து வந்த பெருமையும் இவர்களையே சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Post

பிரதமர் அதிரடி: "அயோத்தியில் இருந்து திரும்பிய பின் அறிவித்த சூர்யோதயா யோஜனா திட்டம்.." இதன் சிறப்பம்சங்கள் என்ன.?

Mon Jan 22 , 2024
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தலைமை ஏற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்வுகளுக்குப் பிறகு தலைநகர் திரும்பிய அவர் பிரதான் மந்திரி சூரிய யோஜனா திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏழைகள் பயன் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகில் இருக்கக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் ஒளியின் சக்தியை வழங்கக்கூடிய ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இந்த […]

You May Like