கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தளி எம்எல்ஏ இராமச்சந்திரன் அவர்களுடன் பேரணியாக வந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
இப்போது கட்சத்தீவு குறித்து பேசும் மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்? தேர்தல் நெருங்க நெருங்க மோடிக்கு ஜொரம் அதிகமாகி உள்ளது, 400 தொகுதிகளில் வெல்வோம் என்றவர் தற்போது 300, 200, 180 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோமா? என எண்ணத் தொடங்கிவிட்டார். அவருடைய கணிப்பின்படியே தொகுதிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. தேர்தல் வந்துவிட்டதால், வேலை வாய்ப்பு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்திருப்பதால் அவற்றை திசை திருப்ப மோடி முயற்சி செய்கிறார்.
1974இல் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதை மீட்கப்பட வேண்டுமென்பது இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கையாக உள்ளது. 10 ஆண்டுகாலத்தில் இது தவறு என பிரதமர் மோடி கருதி இருந்தால், சட்டப்பூர்வமாக மீட்டிருக்கலாமே என கேட்டுள்ளார். 10 ஆண்டுகளாக மோடி யாருக்கே பேன் பார்த்தார்கள் என சொல்ல வேண்டும். மனைவியுடன் வாழ முடியாத, வாழ தெரியாதவன் மோடி, மனைவியுடன் வாழாதவர் மக்களுடன் குடும்பம் எனக்கூறி எப்படி வாழ முடியும்” என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Read More : ’படம் பிடிக்கவில்லை என்றால் செருப்பால் அடிங்க’..!! ஹாட்ஸ்பாட் திரைப்பட இயக்குநர் வேதனை..!!