fbpx

ராஜினாமா செய்தார் மோடி..!! குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!! 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு..!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை மோடி அளித்துள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மோடி அளித்துள்ளார். அதில் 17-வது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தையும் அளித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. நேற்றைய (ஜூன் 04) தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது. இதனால், 18ஆவது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையம் அளிக்கும். அதன் பிறகுதான் அந்த பட்டியலை குடியரசுத் தலைவர் அரசாணையாக வெளியிடுவார்.

இன்று மாலை நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தனக்கு இருக்கும் எம்.பிக்களின் ஆதரவு கடிதத்தை பிரதமர் மோடி ஜனாதிபதியிடம் வழங்குவார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வரும் ஜூன் 8ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : வெற்றியோ, தோல்வியோ எழுச்சியுடன் சம்பவம் செய்த காங்கிரஸ்..!! பாஜகவை திணற வைத்த தமிழர் சுனில்..!!


English Summary

Modi has given the cabinet resolution on dissolution of 17th Lok Sabha to President Draupadi Murmu.

Chella

Next Post

மோடி பிரதமராவதை 1555ஆம் ஆண்டே கணித்த நாஸ்ட்ராடாமஸ்..!! 2026இல் மீண்டும் ஆட்சி மாற்றம்..? பரபரப்பு தகவல்..!!

Wed Jun 5 , 2024
While many experts have predicted the 2024 Lok Sabha elections, do you know what famous prophet Nostradamus predicted about Modi's return to power?

You May Like