குஜராத் இன்று கலவரம் இல்லாத ஒரு மாநிலமாக உள்ளது என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி தான் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பா.ஜ.க.விற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பல்வேறு பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், குஜராத்தில் இன்று கலவரம் இல்லாத நிலை உள்ளது என்றால் அதற்கு பா.ஜ.க. ஆட்சியும் பிரதமர் மோடியும்தான் காரணம். குஜராத் வெற்றி பெற்றால் அது நாட்டின் வெற்றியாகும்.
ஜே.என்.யு.வில் நாட்டை பிளவு படுத்த முயற்சி செய்தவர்களுடன் ராகுல்காந்தி நின்று விட்டு, தற்போது சாவர்க்கர் மீது கேள்விகள் எழுப்புகின்றனர். இதுதான் காங்கிரஸ் மனநிலை. அவர்கள் அவர்களின் குடும்பத்தை தாண்டி வேறு எதையும் யோசிப்பது இல்லை. காங்கிரஸ், மதம் ஆகியவகைளின் அடிப்படையில் மக்களை பிரித்து ஆட்சி செய்தது. என்று தெரிவித்தார்.
குஜராத் மாடல் என்பது வளர்ச்சிக்கான மாடல்தான் குஜராத். காங்கிரஸ் கட்சி, ஜாதி, இனம், மதத்தின் அடிப்படையில் வாக்குகள் கேட்கின்றது. பா-ஜ.க. நல்ல ஆட்சி வளர்ச்சியின் அடிப்படையில் செயல்படுகின்றது என்று அமைச்சர் பேசினார். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.