fbpx

“மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் பலனடைந்தவர் அதானி மட்டுமே!!” – உதயநிதி விமர்சனம்

பிரதமர் மோடியின் பாஜக ஆட்சியில் வாழுகின்ற ஒரே குடும்பம் அதானி குடும்பம் என அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்

சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரங்குச் சாவடி என்ற இடத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வகணபதியை வெற்றி பெற வைக்க வேண்டும். சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால்தான் திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றியை பெறும்.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. 

தமிழ்நாடு பக்கம் எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். 2026 வரை தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும் பிரதமர் மோடியால் வெற்றிபெற முடியாது. நான் சவால் விடுகிறேன், அவரால் நிச்சயம் வெற்றிபெற முடியாது. தமிழக வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிடவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார்” என்றார்.

மேலும், “பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரைவார்த்துவிட்டார். மோடியின் பாஜக ஆட்சியில் அதானி மட்டுமே பலனடைந்தார். பிரதமர் மோடியால் வாழுகின்ற ஒரே குடும்பம் அதானி குடும்பம்” என விமர்சித்தார்.

Next Post

அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 171 அப்டேட்!! ரஜினியுடன் இணையும் அந்த பிரபலம் யார்?

Tue Apr 9 , 2024
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ரஜினி 171’ படத்தில் நடிகை ஷோபனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தளபதி’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் ‘கழுகு’ என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவர் 171ல் […]

You May Like