fbpx

கோலாகலம்…! இன்று மாலை மோடி பதவியேற்பு விழா… 7 நாட்டின் தலைவர்கள் பங்கேற்பு…!

2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு, செஷல்ஸ் நாட்டின் துணை அதிபர் அகமது அஃபிப்; வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசண்டா’, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதோடு, தலைவர்கள் இன்று மாலை குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உலகத் தலைவர்களின் வருகை இந்தியா தனது ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ எனும் கொள்கை மற்றும் ‘சாகர்’ தொலைநோக்கு பார்வைக்கு அளித்த உயர்ந்த முன்னுரிமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

English Summary

Modi’s swearing-in ceremony this evening… 7 heads of state will participate

Vignesh

Next Post

மாணவர்களே!… இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு!… இறுதிவாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

Sun Jun 9 , 2024
The Directorate of Government Examinations has given a final opportunity to revise the name list.

You May Like