இமாச்சல் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ளது சகி என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜிதேஷ் சர்மா என்ற இளைஞருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. பல கனவுகளுடன் இருந்த புதுமாப்பிள்ளைக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி பணம் மற்றும் நகைகளுடன் ஓடிவிட்டதாக புதுமாப்பிள்ளை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், பால்தேவ் சர்மா என்ற தரகர் மூலம் பபிதா என்ற பெண்ணை சந்தித்தேன். திருமணத்திற்காக பால்தேவ் ரூ.1.50 லட்சம் பணம் வாங்கினார். அதன்படி, கோவிலில் பபிதாவை திருமணம் செய்து கொண்டேன். அவரிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால், பதிவு திருமணம் செய்ய முடியாமல் பெரியவர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன்.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரை கவனித்துக் கொள்வதாகவும் கூறி விட்டு வீட்டிலிருந்து சபிதா வெளியேறினார். இரண்டு நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. அப்போது தான், வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு அவர் என்னை ஏமாற்றியது தெரிய வந்தது.
அந்த தரகர் பல்தேவ் சர்மாவும் எனது போனை ஏற்க மறுக்கிறார். எனவே, அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த புகார் பெற்றுக் கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.