தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் நிதி வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
➦ தமிழ்நாட்டில் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற சிறப்பு வகுப்பு அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும். இதில் தேர்வு செய்யப்பட்ட 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000 நிதி வழங்கப்படும்.
➦ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்.
➦ நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
➦ 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
➦ நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
➦ அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் AI, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
➦ 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் அமைக்கப்படும்.
➦ ரூ.11,721 கோடியில்புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் (வெள்ளிமலை – 1,100 மெகாவாட் திறன், ஆழியாறு – 1,800 மெகாவாட் திறன்).
➦ ரூ.350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் 3,010 ஏக்கர் பரப்பளவில் 14 டிஎம்சி கொள்ளளவில் அமைக்கப்படும்.