நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, வேலை அல்லது தொழில் செய்வோர் என இரு தரப்பினருக்காகவும் எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, எஸ்பிஐ வங்கி மாத வருமானம் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் எஸ்பிஐ ஆண்டுத் தொகை டெபாசிட் திட்டம் ஆகும். இதில் முதலீட்டாளர்களுக்கு உத்திரவாதத்துடன் வருமானமும் கிடைக்க வழிவகை செய்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் ஒரு பெரிய தொகையை மொத்தமாக செலுத்தி விட்ட பிறகு பயனாளிக்கு மாதந்தோறும் தவணைத் தொகையை எஸ்பிஐ வங்கி செலுத்தும். அதில், அசல் மற்றும் வட்டி என இரண்டும் கலந்திருக்கும். இதனால் முதலீட்டாளர்களின் அசல் தொகை குறைந்து கொண்டே வரும். இந்த திட்டத்தில் 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகள் என பல்வேறு கால வரம்புகளுக்கு முதலீடு செய்து பயன்பெறலாம். இதில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளையை அணுகி, முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.