fbpx

ஆதார் அட்டை மீது நம்பகத்தன்மை இல்லை…! பரபரப்பை கிளப்பிய மூட்ஸ் நிறுவனம்…! மத்திய அரசு விளக்கம்…!

பிரபல மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் ஐடி என விளக்கம் அளித்துள்ளது.

மூட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

மூட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஆதார் அடிக்கடி சேவை மறுப்பு கோளாறுகளை உண்டாக்குவதாகவும், பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களின் நம்பகத்தன்மை இல்லை என்று கூறி உள்ளது. குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கைரேகை, கருவிழி ஸ்கேன் மூலம் சரிபார்ப்பு மற்றும் OTPகள் போன்ற மாற்று வழிகள் மூலம் பொது மற்றும் தனியார் சேவைகளுக்கான அணுகலை ஆதார் அமைப்பு செயல்படுத்துகிறது. இருப்பினும், இது “அங்கீகாரத்தை வழங்குவதில் சிக்கல் மற்றும் பயோமெட்ரிக் நம்பகத்தன்மை பற்றிய கவலைகளை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மறுப்பு

உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடியான ஆதாருக்கு எதிராக மதிப்பீடு ஏஜென்சியான மூடிஸ் எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பகத்தன்மை குறித்து குற்றம்சாட்டி உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஆதார் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இது தவிர, இந்தியர்கள் 100 பில்லியனுக்கும் அதிகமான முறை ஆதார் உதவியுடன் தங்களைத் தாங்களே சரிபார்த்துக் கொண்டனர்.

அந்த அறிக்கையில் எந்த தரவுகளையும் அல்லது ஆராய்ச்சியையும் மேற்கோள் காட்டவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தொடர்பான உண்மைகளை கண்டறிய மதிப்பீடு நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏஜென்சி வழங்கிய ஆதார் எண்களின் மொத்த எண்ணிக்கையும் தவறாக உள்ளது.

முக அங்கீகாரம் மற்றும் கருவிழி அங்கீகாரம் போன்ற தொடர்பு இல்லாத வழிகளிலும் ஆதார் சரிபார்க்கப்படுகிறது. இது தவிர, பல சந்தர்ப்பங்களில் ஆதார் சரிபார்ப்பும் OTP மூலம் செய்யப்படுகிறது. இந்தியாவின் ஆதார் அட்டை முறையை IMF, World Bank போன்ற சர்வதேச நிறுவனங்கள் பாராட்டி உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

Vignesh

Next Post

டாஸ்மாக் கடைகள் நாளை விடுமுறையாமே..!! அட இந்த தேதியிலுமா..? மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Wed Sep 27 , 2023
தமிழ்நாட்டில் நாளை மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை செப்.28ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபியை முன்னிட்டு நாளை செப்.28 வியாழக்கிழமை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் படி அனைத்து […]

You May Like