உத்தர்காசியில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் 350க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இறந்தன.
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.. பார்சு என்ற கிராமத்தில் வசிக்கும் சஞ்சீவ் ராவத், தனது நண்பருடன், பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மத்தியில் தனது செம்மறி ஆடுகளை கொண்டு வந்து கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியது.. அதில், குறைந்தது 350 ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இறந்தன. கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மின்னல் தாக்குதல் சம்பவங்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், செம்மறி ஆடுகள் இறந்ததாகப் புகாரளிக்கப்பட்டதாகவும், சேதத்தை மதிப்பிடுவதற்கு குழு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இக்குழு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 30ம் தேதி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…