தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் அரசு ஒருவரை நியமனம் செய்கிறது. இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருபவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவருடைய கல்வி மற்றும் இதர தகுதிகள் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. மாவட்ட அரசுப் பணியிடங்களில் காலியிடம் ஏற்படும் போது அந்தப்பணியிடத்திற்கு தகுந்த ஆட்களைத் தேர்வு செய்திட விரும்பும் அந்தத்துறை அதிகாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அவர்கள் கோரும் தகுதியுடையவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் குறிப்பிட்ட விகிதக் கணக்கின்படி ப்ரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் தொடர்ந்து வேலையின்றி இருந்து வருபவர்களுக்கு அவர்கள் பதிவுமூப்பு மற்றும் அவர்கள் குடும்ப வருவாய் அடிப்படையில் தமிழக அரசு வழங்கி வரும் உதவித்தொகை அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இதுபோல் அரசின் உயர் பதவிக்களுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு தகுந்த ஆசிரியர் மற்றும் அலுவலர்களைக் கொண்டு மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்பொழுது தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 நபர்கள் காத்திருப்பதாக அதர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.