ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.
ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், ”ரஜினிகாந்த் ஒரு தலைவரா?.. அவர் பழைய தலைவர். இதற்கு மேலும் அவர் நடித்து என்ன பண்ணப்போகிறார். அரசியலுக்கு அவர் வந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஒரு நல்ல மனிதர்.
அவரிடம் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அரசியலுக்கு வந்து அதை காட்டியிருக்க வேண்டும். அப்படி காட்டியிருந்தால் மக்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்திருக்கும். தமிழ்நாடு நிலைகுலைந்து கிடந்திருக்கும் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் ஒரு நல்ல தலைவராக இருந்திருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்திருக்க வேண்டும். இதைத்தான் அவரிடம் நான் எதிர்பார்த்தேன். நடித்தால் மட்டும் போதும் என்று அவர் நினைக்கிறார். ஆனால், தலைவராக வந்திருக்க வேண்டும். அதை செய்ய ரஜினி தவறிவிட்டார். அத்தனை பேரையும் அவர் ஏமாற்றிவிட்டார்” என்று தெரிவித்தார்.
Read More : உங்களுக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லையா..? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? உடனே இதை பண்ணுங்க..!!