fbpx

மார்ஃபிங் புகைப்பட விவகாரம்| கர்நாடகத் துணை முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

பாஜக தலைவர்களின் போராட்டத்தின் மார்பிங் படத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு நகர காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்ற கரசேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி சமீபத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாங்களும் கர சீவகர்கள் என்று எழுதிய பாதகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாரதிய ஜனதா கட்சியினர் பயன்படுத்திய பாதகைகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டது தொடர்பான வாக்குமூலம் அளித்தது போல் மாற்றி சமூக வலைதளங்களில் பரப்பினர். இது போன்ற சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை கர்நாடக துணை முதல்வரின் சமூக வலைதள பக்கத்திலும் பகிரப்பட்டது மேலும் கர்நாடகா காங்கிரஸ் தலைவரும் பகிர்ந்து இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பிரிவு மாநில கன்வீனர் யோகேந்திர ஹோடகட்டா,”சமூகங்களுக்கு இடையே பகையை உருவாக்க தவறான ஆவணத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப ஊடகப்பிரிவு தலைவர் ஆகியோர் மீது எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிஆர்பிசியின் 156(3) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Post

’14 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க ரெடியா’..? ’உடனே நாங்க வர்றோம்’..!! பிரேமலதா விஜயகாந்த் கண்டிஷன்..!!

Wed Feb 7 , 2024
பிப்.12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் காண பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. […]

You May Like