Non-Vegetarian:இந்தியாவில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை 82 சதவீதம் என தெரியவந்துள்ளது.
மக்கள் பலரும் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலான உணவு வகைகள் அசைவத்தை சேர்ந்ததாகத்தான் இருக்கும். சமீப காலமாக அசைவ பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.. குறிப்பாக இந்தியாவில் அசைவம் விரும்பிகள் அதிகம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவோரின் எணிக்கை 82 சதவீதம் என தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கம், கோவா மற்றும் கேரளாவில் குறிப்பாக அசைவ உணவு உண்பவர்கள் அதிகமாக உள்ளனர், இந்த மாநிலங்களில் 99% பேர் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். தமிழ்நாடு , வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களும் 95% க்கும் அதிகமான விகிதங்களைப் பதிவு செய்கின்றன. இறைச்சி உட்கொள்வது வெறும் உணவாக மட்டும் இல்லாமல் கலாச்சாரமாகவும் இருக்கும் பல்வேறு பிராந்தியங்களின் சமையல் மரபுகளில் அசைவம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அந்த ஆய்வின்படி, அதிக அசைவ நுகர்வோர் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 98 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோல், அடுத்தடுத்த இடங்களில் வடகிழக்கில் 98% பேர், ஆந்திராவில் 98% பேர், தெலுங்கானாவில் 97% பேர், ஜம்மு, ஒடிசாவில் 96% பேர், பீகாரில் 92% பேர், ஜார்கண்டில் 91% பேர், கர்நாடகாவில் 88% பேர், மகாராஷ்டிராவில் 87% பேர், டெல்லியில் 83% பேர், உத்தரபிரதேசத்தில் 79 % பேர் அசைவம் சாப்பிடுகின்றனர்.
Readmore: கொத்துக்கொத்தாக உயிர்பலி வாங்கிய வெள்ளம்!. ஸ்பெயின் மன்னர் மீது சேற்றை வீசிய மக்கள்!. வைரல் வீடியோ!