Murder: பீகாரில் ஒரே இளைஞருடன் தாயும், மகளும் தகாத உறவில் இருந்ததை கண்டித்த கணவரை, 3 பேரும் சேர்ந்து கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் பாரி ராமசி கிராமத்தை சேர்ந்தவர் கைலு தாஸ் (35). இவரது மனைவி சரிதா தேவி. இவர்களுக்கு ஜூலி என்ற மகளும், தயானந்த், தேவானந்தன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவர்களது மூத்த மகன் பாங்கா மாவட்டத்தின் ராஜாவுனில் வசித்து துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மேலும் கைலு தாஸ், சிறிய ஓட்டல் மற்றும் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், மூத்த மகன் தயானந்த் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தனது தந்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தயானந்த தாய் மற்றும் சகோதரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் திருப்திகரமான பதில் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து, கிராம மக்களிடம் விசாரித்தபோது, தகவல் ஏதும் தெரியாததால், தனது தந்தை காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
தகவலறிந்து காவல்நிலையத்திற்கு சென்ற, தாயும், சகோதரியும் கைலு தாஸை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கிராம மக்கள் காவல்துறையை அழைத்து கைலுவின் வீட்டின் முற்றத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த கைலு தாஸின் உடலை தோண்டி எடுத்தனர். இதனால், தயானந்த் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தாயையும், மகளையும் அடித்து கிராம மக்கள் விசாரித்துள்ளனர். அப்போது முழு நாடகமும் அம்பலமானது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். விசாரணையில், ஹோட்டல் நடத்தும் போது சரிதா தேவியையும் அவரது மகள் ஜூலியையும் பலர் சந்தித்து பழகி வந்துள்ளனர். அதில், பல்வா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் யாதவ் என்ற இளைஞர் ஹோட்டலுக்கும் அவரது வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் கைலுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தினேஷ் யாதவ், தாய் மற்றும் மகளுடன் தகாத உறவு வைத்திருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக சம்பவத்தன்று மனைவியும் தினேஷும் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால், தாய், மகள், கள்ளக்காதல் தினேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கைலுவை அடித்து கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளதும் அம்பலமானது. இதையடுத்து, தினேஷ் யாதவை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Readmore: “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் ரூபாய் 1 கோடி வரை கடன்…! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும்…!