fbpx

தாயும், மகளும் ஒரே வீட்டில்..!! மொத்தம் 4 பெண்கள்..!! வலையில் சிக்கிய ஆண்ட்டி..!! கர்ப்பமான சிறுமி..!! யார் இந்த விஸ்வா..?

சேலத்தில் சிறுமி உள்பட இளம் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த வாலிபர் போக்சோ வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 25 வயது வாலிபர் ஒருவர், பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்தன. அந்த வாலிபர் பெயர் விஸ்வா (25). இவர், கன்னியாகுமரி மாவட்டம் இருளபுரத்தை சேர்ந்தவர். இவர், கடந்தாண்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, அந்த கடையில் பணிபுரிந்த 21 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார் விஸ்வா. திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் விஸ்வா அந்த இளம்பெண்ணை பிரிந்து, கிருஷ்ணகிரியில் உள்ள ஜூஸ் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது, அந்த பகுதியில் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்த 25 வயது இளம்பெண், விஸ்வா வேலை பார்க்கும் ஜூஸ் கடைக்கு அடிக்கடி வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஸ்வா விரித்த ஆசை வலையில் விழுந்த அந்த இளம்பெண்ணையும் பலமுறை அனுபவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து, குழந்தைகளுடன் சேலம் அழைத்து வந்துள்ளார். அங்கு அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் பகுதியில் அந்த பெண் மற்றும் அவரது குழந்தைகளுடன் விஸ்வா வீடு எடுத்து தங்கியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணையும் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இந்த விவகாரம் 2-வது மனைவியான 25 வயது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால், தன்னை விலக்கி வைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த பெண்ணையும் தன்னோடு சேர்த்து ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளார். இதையடுத்து இரண்டாவது மனைவி, பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண் மற்றும் அவரது 16 வயது மகள் என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்துள்ளனர். சில நாட்களில் 2 பெண்களுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

இதையடுத்து 40 வயது பெண்ணையும், அவரது 16 வயது மகளையும் வேறொரு வீட்டில் தங்க வைத்து வைத்து அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, விஸ்வாவுக்கு அந்த 16 வயது சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. தாய்க்கு தெரியாமல் சிறுமியையும் ஆசைவார்த்தை கூறி வலையில் சிக்க வைத்துள்ளார். பின்னர் சிறுமியுடனும் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானது. இதையடுத்து, புகாரின்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விஸ்வாவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். விஸ்வாவுக்கு இவர்கள் 4 பேர் தவிர வேறு பெண்களுடனும் உறவு உள்ளதா? யாரையும் ஏமாற்றியுள்ளாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இமயமலை கிளம்பிய ரஜினி..!! ’சூப்பர் ஸ்டார்’ சர்ச்சை குறித்து பரபரப்பு பேட்டி..!!

Wed Aug 9 , 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது படங்களின் ரிலீசுக்கு முன்னர், இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]

You May Like