மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது.
டெல்லியில் ஃபுல்கிரீம், டோன்ட் மற்றும் டபுள் டோன் பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கும் என்று மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இது ஐந்தாவது முறையாக நிறுவனம் விலையை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உள்ளீடு செலவுகள் அதிகரிப்பதால் தான் என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பசும்பால் மற்றும் டோக்கன் பால் மாறுபாடுகளுக்கான MRP இன்னும் திருத்தப்படவில்லை.

“பால் வணிகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வருடத்தில் அதிகரித்து வருகிறது. விடுமுறைக்கு பிறகும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பால் மற்றும் பால் பொருட்களின் தேவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. மறுபுறம், எதிர்பார்ப்புகளை மீறி, கச்சா பால் கொள்முதல் செய்யப்பட்டது. பண்டிகை காலங்கள் வர உள்ளதால் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் நிறுவனம் இந்த விலையை உயர்த்தி உள்ளதாக வணிகர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர்.