fbpx

“விபச்சாரம் செய்தால் தான் அதிக பணம் கிடைக்கும்”; கணவரின் பேச்சை கேட்டு பெற்ற தாய் செய்த காரியம்.

ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து ஆளாகும் வரை அவர்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு அவர்களின் பெற்றோர் தான். ஆனால் அந்த பெற்றோர் சரி இல்லையென்றால், அந்த குழந்தையின் வாழ்க்கையே நாசமாகிவிடும். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே” என்னும் பாடல் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை தான். அந்த வகையில் தாய் சரியில்லாததால் இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை நரகமாகியுள்ளது.

சூலூர் அருகே கருமத்தம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் மற்றும் இரண்டாவது கணவருடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில், விபச்சாரம் செய்தால் தான் அதிக பணம் கிடைக்கும் என்று இரண்டாவது கணவர் ஆலோசனை கொடுத்துள்ளார். இதனால் அந்த தாய் தனது மகளையே விபச்சாரத்தில் தள்ளி உள்ளார். இதற்காக தனியாக வாடகைக்கு வீடு பிடித்து அந்த வீட்டை விபச்சார விடுதி ஆக்கியுள்ளனர்.

இது மட்டும் இல்லாமல், இரண்டாவது கணவர் புரோக்கர் ஆக செயல்பட்டு ஆட்களை பிடித்து வருவதாகவும் மகளுடன் உல்லாசமாக இருக்கும் நபர் கொடுக்கும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் அடிக்கடி ஆண்கள் வந்து போவதை கவனித்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Read more: சொந்த சகோதரனுடன் பாலியல் உறவு; கள்ளக்காதலுக்காக பல ஆண்களை திருமணம் செய்து கலட்டி விட்ட ஆண்டி..

English Summary

mother-forced-her-daughter-for-prostitution

Next Post

மோப்ப சக்தியால் பெண்கள் கர்ப்பமாவதை கண்டுபிடிக்கும் நாய்கள்..!! இந்த அறிகுறிகளை கவனிச்சிருக்கீங்களா..?

Wed Nov 13 , 2024
Dogs will be more loving and protective of you than usual.

You May Like