fbpx

கர்நாடகா: கொதிக்க கொதிக்க வெந்நீரை 9 வயது மகள் மீது ஊற்றிய தாய்.! கள்ள உறவுக்கு இடையூறாக இருந்தால் ஆத்திரம்.!

கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமியின் மீது வெந்நீர் ஊற்றப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது 9 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள டவுன் பகுதியில் அமைந்துள்ள விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு விடுதியில் பணியாற்றும் மற்றொரு ஊழியருடன் வணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வார்டனும் அந்த ஊழியரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருமுறை இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதை அவரது மகள் பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வார்டன் தனது மகளை அடித்து உதைத்ததோடு அவர் மீது கொதிக்கின்ற வெந்நீரை ஊற்றி இருக்கிறார். இந்த சம்பவத்தில் வலியால் துடித்த 9 வயது சிறுமி இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அவரது புகாரியின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிறுமியின் தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த மகள் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

Next Post

கோவிட்-19: 24 மணி நேரத்தில் 5 பேர் பலி.! மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

Sun Jan 7 , 2024
கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது. இந்தத் தொற்றால் பல கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தத் தொற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது . இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. […]

You May Like