உலகில் அதிகம் பேசப்படும் வீடுகளில் ஒன்றாக ஆண்டிலியா எப்போதும் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. அதன் தனித்துவம் மற்றும் ஆடம்பர வசதிகளால், இது பலரது கவனத்தையும் ஈர்க்கிறது. இந்த 27 மாடி வானளாவிய மாளிகை, உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இல்லமாகும். இவர் தனது மனைவி நிதா அம்பானி மற்றும் குழந்தைகள் இஷா, ஆகாஷ், மற்றும் ஆனந்த் உடன் மும்பையில் வாழ்கிறார்.
இந்த மாளிகையின் மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபாய். இதில், மொட்டை மாடித் தோட்டம், ஸ்பா, பனி அறை என விருப்பமான எல்லா வசதிகளும் உள்ளன. அழகு, வசதி, தனிச்சிறப்பு அனைத்திலும் ஆண்டிலியா ஒரு அற்புதக் கட்டிடக்கலைக் கலைப்பொருள் எனலாம். சமீபத்தில் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தது. காரணம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மாளிகையில் ஏர் கண்டிஷனிங் (ஏசி) இல்லையாம்.
இது வீட்டு தோற்ற அழகை பாதிக்கக்கூடும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, இந்த வீடு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் சிறப்பு என்னவென்றால், வீட்டில் உள்ள பளிங்கு, பூக்கள், தாவரங்கள் போன்றவற்றின் தேவைக்கேற்ப வெப்பநிலை தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால், அந்த வெப்பநிலையை நாமே கைமுறையாக மாற்ற முடியாது.
சமீபத்தில், நடிகை ஸ்ரேயா தன்வந்த்ரி ஆன்டிலியா சென்ற தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தனது ஒரு படப்பிடிப்புக்கு நடிகை ஸ்ரேயா, பிரபல ஃபேஷன் டிசைனர்கள் அபு ஜானி-சந்தீப் கோஸ்லா மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாடல்களுடன் ஆன்டிலியாவுக்குச் சென்றார். ஆன்டிலியாவிற்குள் தான் குளிர்ச்சியாக உணர்ந்ததாக ஸ்ரேயா தெரிவித்தார், மேலும் அம்பானி வீட்டின் மேலாளரிடம் ஏசி வெப்பநிலையை சரிசெய்யச் சொன்னபோது, அதற்கு அவர் வெளிப்புறத்திலிருந்து கையால் சரிசெய்ய முடியாது என்று பதிலளித்தார்.
மாளிகையில் உள்ள பளிங்கு மற்றும் பூக்களை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், வீட்டின் உள்ளே உள்ள பல்வேறு இடங்களுக்கு ஏற்ப ஏசி தானாகவே சரிசெய்யப்படும் என்றும் மேலாளர் அவரிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில், ஆன்டிலியாவிற்குள் உள்ள ஒவ்வொரு அறையும் சராசரியாக 300 யூனிட்களைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் முழு கட்டமைப்பின் சராசரி நுகர்வு மாதத்திற்கு சுமார் 6,37,240 ஆகும், இது மும்பையில் உள்ள சுமார் 7000 நடுத்தர வர்க்க வீடுகளின் மாதாந்திர மின்சார நுகர்வுக்கு சமம்.
முகேஷ் அம்பானி குடும்பத்தின் 27 மாடிகள் கொண்ட “ஆண்டிலியா” அதன் ஆடம்பர வசதிகளாலும், தனித்துவமான வடிவமைப்பாலும் உலகளவில் புகழ்பெற்றது. இந்த மாளிகையின் உள்ளமைப்பு மற்ற வீடுகளுடன் ஒப்பிட முடியாத வகையில் அசாதாரணம். இந்த ஆடம்பர மாளிகை 173 மீட்டர் உயரமும் 37,000 சதுர மீட்டர் பரப்பளவும் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது. இந்த உயரமான கட்டிடத்தில் பல அடுக்கு கார் பார்க்கிங், 9 அதிவேக லிஃப்ட் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு உடைகள் உள்ளன. நவீன இந்தியாவின் கட்டிடக்கலை அற்புதத்தில் ஆன்டிலியா மிகவும் முக்கியமானது.