மும்பையில் ஒரு தம்பதிக்கு 20 மாத குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தையை பக்கத்து வீட்டு நபர் சில நாட்களாகவே அடிக்கடி நோட்டமிட்டு வந்துள்ளார். 35 வயதான அந்த வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த குழந்தையின் தந்தை வேலைக்கு சென்றுவிட தாய் அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவர் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தாய் வீட்டிற்கு வந்தவுடன் குழந்தை வீரிட்டுறிட்டு அழுது கொண்டிருந்தது.
இதை பார்த்து பதறிப் போன தாய் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை கண்டறிந்தனர். இது பற்றி போலீசாரிடம் பெற்றோர் தகவல் கொடுத்தனர்.
உடனே, அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பக்கத்து வீட்டுக்காரர் மீது சந்தேகம் வந்து கைது செய்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 20 மாத குழந்தைக்கு நடந்த இந்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.